ஜனாதிபதியை சந்தித்த ததேகூ என்ன பேசியது? 28ல் முக்கிய பேச்சு!

தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எடுத்துரைத்துள்ளது.

நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த விடயம் எடுத்துரைக்கப்பட்டதாக தமிழரசு கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதனுடன் காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் பௌத்த தேரர்களால் கன்னியா, நீராவியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறல்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாமை காரணமாக இந்த முக்கிய பேச்சு வார்த்தை மீண்டும் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சித்தார்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

No comments