கிளிநொச்சி ஊடகவியலாளரிடம் ரிஐடி விசாரணை - புலிச் சந்தே நபருடன் பேசினாராம்!

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனிடம் 4ம் மாடியில் வைத்து இன்று (06) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தேடப்படும் ஒருவர் புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு ஊடகவியலாளர் நிபோஜனிடம் உரையாடியது தொடர்பிலேயே இவ்வாறு அவரிடம் மூன்று மணிநேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜனை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக இன்று கொழும்பு ஒன்றில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு கிளிநொச்சி அலுவலகத்தின் ஊடாக அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தது.

No comments