தெரிவுக்குழு முன்னிலையில் ஜதேக தலைகள்?


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் சாட்சியம் அளிக்க, இன்று (06) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஜதேக பிரமுகர்கள் முன்னிலையாகிவருகின்றனர்.

அத்துடன், கப்பற்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக, பொது நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மத்தும பண்டார, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோர் இன்று தெரிவு குழுவில் முன்னிலையாகவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனிடையே முதலில்டிசட்டம், ஒழுங்குகள் அமைச்சின் முன்னாள் அமைச்சரும் துறைமுகம், தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

No comments