ஈரோஸ் இப்பொழுது யாரிடம்?


2009ம் ஆண்டின் பின்னர் ஈரோஸ் இயக்கத்திற்கு மீள புத்துயிர் ஊட்ட அதன் பல தரப்பினரும் தனித்தனியாக மும்முரமாகியுள்ளனர்.எனினும் அது பட்டுப்போன மரத்திற்கு புத்துயிர் கொடுப்பதாகவே அமைந்துள்ளது.

இதனிடையே மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஈரோஸ் கட்சி ஆதரவு வழங்கியதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என ஈரோஸ் கட்சியின் ஒரு பிரிவின் தலைவர் இரா.பிரபாகரன் என்பவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுடன் ஈரோஸ் இணைந்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. வன்னியில் உள்ள ஈரோஸை சேர்ந்த துஷ்யந்தன் என்பவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்ததாக செய்திகள் வெளிவந்தன. ஈரோஸ் எந்த பேரினவாத கட்சிகளுடனும் இணையவில்லை, இணையப் போவதும் இல்லை.

ஈரோஸை வைத்து பிழைப்பு நடாத்துவதற்கு முற்பட்டவர்களை நாங்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தினோம். அவர்களை மஹிந்த அணியுடன் இணைத்துக் கொண்டு, ஈ.பி.ஆர்.எல்.எப். உடன் இணைத்துக் கொண்டு எமது கட்சியை வைத்து பிழைப்பு நடாத்துவதற்கு முற்படுகின்றனர். ஈரோஸை பற்றி கதைப்பதற்கு யாரும் தகுதியில்லை.

எமது கட்சியின் பெயரை பாவித்து மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபருக்கு பிடிவிராந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இதனிடையே போட்டி ஈரோஸ் தரப்பு வியாழன் யாழில் ஊடகங்களை சந்திக்கவுள்ளது.

No comments