வணிக வளாகத் துப்பாக்கிச் சூட்டில் 20பேர் பலி!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பன்சோ என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தில்  துப்பாக்கிச் சூடு நடத்திய போது, 20 பேர் உயிரிழந்ததாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

எல் பாஸ்கோ போலீஸ் தலைவர் கிரெக் ஆலன் இந்த சம்பவம் தொடர்பில்  கூறுகையில் மெக்சிக்கோ, சிடாட் ஜிரெஸ், முக்கிய எல்லைப் சோதனைச் சாவடியில் இருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் இந்த தாக்குதல் நடந்திருப்பதனால் இந்த சம்பவத்துக்கும் மெக்சிக்கோ குடியேறிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்துவருவதாக தெரிவித்துள்ளார்.

No comments