மெனிக்கே ரயில் மோதி ஒருவர் மரணம்


பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே புகையிரதத்தில் இன்று (04) காலை 10.30 மணியளவில் வயோதிபர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்து தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றதாகவும் புகையிரதம் வரும் பொழுது புகையிரத வீதியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

இதில் (65) வயதுடைய ஒருவரே பலியானார்.

No comments