இப்ரஹிம் அமைப்பின் கொள்கை பரப்பாளர் கைது


இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாத்தி மிலாத்து இப்ரஹிம் பயங்கரவாத அமைப்பின் அமைப்பின் கொள்கை பரப்பாளராக செயற்பட்ட சந்தேகத்தில் ஒலுவில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மொஹமட் சல்மான் என்ற மற்றுமொரு மாணவர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அமைப்பின் கொள்கையை பரப்பி வந்த நிலையிலேயே குறித்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று (03) அதே பல்கலைக்கழக மாணவரான குறித்த அமைப்பின் கிழக்கு மாகாண இராணுவ பிரிவு தலைவர் என்ற சந்தேகத்தில் நௌஷாட் உமர் என்ற மாணவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments