விண்வெளிக்கு எந்திரனை அனுப்பியது ரஷ்யா?

ரஷ்யாவினால் முதல் முதலாக மனித எந்திரன் ஒன்று விண்வெளிக்கு அனுப்பட்டுள்ளது. கசகஸ்தான் நாட்டில் அமைந்து்ளள ரஷ்யாவின் விண்ணுந்து ஏவுதளத்திலிருந்து சோயுஸ் எம் எஸ் - 14 என்ற ஆளில்லா விண்கலத்துடனே குறித்த எந்திரன் அனுப்பட்டுள்ளது.

 “ஸ்கைபோட் எஃப் 580 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த எந்திரன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவி செய்வதற்காக 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது.

குறித்த எந்திரன் 1.8 மீ உயரமும் 160 கிலோ எடையும் கொண்டது. இது, மின் இணைப்புகளை சரி செய்தல், தீயணைப்பான்களை பயன்படுத்துதல் போன்ற பணிகளை விரைவாகச் செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று 2011 ஆம் ஆண்டு அமெரிக்கா விண்வெளி மையமான நாசா, ரோபோனாட்-2 என்ற மனித எந்திரனை அனுப்பியது. ஆனால் அது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 2018ம் ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டது.

2013 ஆம் ஆண்டு ஜப்பான் இதே போன்று கிரோபோ என்ற சிறிய எந்திரனை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments