சவேந்திரவின் நியமனம் மோசமான செயல் சாடுகிறார் சிவகரன்

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் பங்கேற்று பல்வேறு விதமான மனித இனப்படுகொலைக்கு காரணமாக இருந்து சர்வதேச சமூகத்தினால் போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திரடி சில்வாவை இலங்கையினுடைய இராணுவ தளபதியாக அரசாங்கம் நியமித்து இருப்பது மிக பிற்போக்குத்தனமான செயற்பாடு என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.


தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று (22) மதியம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும், யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகளாகியும் இவர் மீது பல்வேறு விதமான போர் குற்றச்சாட்டுக்கள் உலகலாவிய ரீதியில் பல வெளிநாடுகளினால் குற்றம் சாட்டப்பட்டிருந்த சூழ்நிலையில்,பல்வேறு மனித உரிமை தரப்புக்கள் இவர் மீது விசாரனைகள் நடாத்தப்பட வேண்டும் என்கின்ற வேண்டுகோள் விடுத்திருந்த சூழ் நிலையில் இந்த நியமனம் என்பது மிக மோசமானதாக காணப்படுகின்றது. என்றார்.

No comments