கஞ்சா தூள் வைத்திருந்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!


திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 10 பைக்கட் கஞ்சா தூள் வைத்திருந்த ஒருவரை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இன்று (22) உத்தரவிட்டார். 

ஆலீம் நகர், மூதூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

No comments