45,000 வருகை,859 பலி! ஐநா அறிக்கை

இந்த ஆண்டில் இதுவரைக்கும் 45,000 அகதிகள் ஐரோப்பாவிற்குள் புகலிடம் கோரி வந்துள்ளதாக  ஐ. நாவின் சர்வதேச குடியேற்ற அமைப்புக்கான அமைப்பு (IOM) கூறியுள்ளது.இதில், 859 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், கிட்டத்தட்ட 64,836 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்து வந்தவர்கள் மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவை வந்தடைந்ததாகவும்  இதில் 1,558 பேர் கடலில் மூழ்கியுள்ளனர் என ஒப்பிடு செய்துள்ளனர்.

No comments