இந்தியப் படங்களுக்கு பாகிஸ்தானில் தடைவிதித்தது அரசு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ,  பிரிக்கப்பட்ட  நிகழ்வு சர்வதேச அளவில் எதிரொலித்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கும் வேருப்பெத்தியுள்ள நிலையில் , பாகிஸ்தான் அரசு இந்தியப் படங்களுக்கு பாகிஸ்தானில் தடை விதித்துள்ளது.
“எந்த இந்தியத் திரைப்படங்களும் பாகிஸ்தான் திரையரங்குகளில் திரையிடப்படமாட்டாது. டிராமா, திரைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய தயாரிப்புகளுக்கும் பாகிஸ்தானில் தடைவிதிக்கப்படுகிறது” என்று பாகிஸ்தான் அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறைaஅறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு இந்தியப் படங்களுக்கு தடை விதிப்பது இது முதல் முறை அல்ல. இரு நாட்டு அரசியலில் அசாதாரணமான சூழல் நிலவும் போதெல்லாம் பாகிஸ்தான் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இதற்கு முன்பாக பிப்ரவரி மாதம் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலுக்குப் பின்பும் பாகிஸ்தான் அரசு இந்தியத் திரைப்படங்களுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments