நேவிக்கு தண்ணீருண்டு:தமிழனுக்கு இல்லையாம்?
யாழ்ப்பாணத்தில் குடிநீர் பிரச்சினை பெரும்பிரச்சினையாகி வருகின்றது.இந்நிலையில் அருகிலுள்ள குடிநீரை அயற்பிரதேச மக்களிற்கு கொடுக்க மறுக்கும் கூட்டமைப்பின் ஆட்சியின் கீழுள்ள பிரதேசசபைகள் மறுபுறம் படையினரால் மேற்கொள்ளப்படும் தண்ணீர் சுரண்டலை கண்டுகொள்ளவில்லையென குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளது.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ஒருவர் அதிகாரம் படைத்த தரப்புக்கள் வகை தொகையின்றி எடுக்கும் நீரைப் பற்றியோ குழாய் கிணறுகள் தொடர்ந்து இயந்திர மூலம் தோண்டப்படுவதால் முழுப் பிரதேசமுமே உப்புநீராக மாறி வரும் அபாய நிலையை பற்றி சிந்திப்பதோ அதனை தடுத்து நிறுத்த தமக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்துவது பற்றி சிந்தித்து நடவடிக்கை எடுப்பதோ இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
குடாநாட்டின் தீவகப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பில் விநியோகிக்க தேவையான குடிநீரை பெற்றுக்கொள்ளும் கிணறுகள் தொடர்பில் உள்ளுராட்சி மன்றங்கள் முட்டி மோதிவருவது தெரிந்ததே.
Post a Comment