நல்லூரில் விளக்கு பிடிக்கும் மாநகரசபை?


கதிர்காமத்தில் உற்சவத்தின் போது அனைத்து மக்களும்  சோதனையேதுமின்றி விடுக்கப்பட நல்லூரில் மட்டும்  ஆலயத் திருவிழாவின் போது வருகை தரும்; பக்தர்களை சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பொலிசாரின் கோரிக்கையினை தலையில் வைத்து கொண்டாடுகின்றனர் யாழ்.மாநாகசைபை உறுப்பினர்கள்.அத்துடன் அதற்கான சோதனைக் கூடங்களை யாழ்ப்பாணம் மாநகரசபை அமைத்து வழங்கியுள்ளதுடன் அதனை புகைப்படமெடுத்து கொண்டாடியுமுள்ளனர் மாநகரசபை உறுப்பினர்கள்.

நல்லூர் ஆலயத்தின் வருடாத்த உற்சவம் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்கே வரும் பக்தரகள் சோதனைக்கு உட்படுத்திய பின்பே அனுமதிக்கப்படுவர் என பொலிசார் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர்.இந்நிலையில் குறித்த சோதனை நடவடிக்கைக்காக சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைக்கப்பட்ட சோதனைக் கூடங்கள் மாநகர சபையினால் அமைக்கப்பட்டதனையடுத்து அதனை மாநகர முதல்வர் , ஆணையாளர் ஆகியோர் குறித்த சோதனை கூடங்களை பார்வையிட்டனர். ஆலயத்திற்கான 4 நுழைவாயிலிலும் தலா இரு சோதனைக கூடங்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனைக் கூடங்களை அமைப்பதற்காக மாநகர சபைக்கு 3 லட்சம் ரூபா வரையில் செலவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெற்கில் இல்லாத பாதுகாப்பு அச்சுறுத்தல் வடக்கில் மட்டுமொ இருக்கின்றதென கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments