குடிபோதையினால் நடந்த சோகம் - தம்பியினால் அண்ணன் கொலை

காலி - எல்பிட்டிய, கனேகொட பகுதியில் நேற்று (13) இரவு ஒருவர் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலை முற்றியதை அடுத்து இளைய சகோதர் மூத்த சகோதரனை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ப. ஷாந்த புஷ்பகுமார என்ற 51 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குடி போதையில் தனது தாயை தாக்கும் போது அதனை இளைய சகோதரன் தடுக்கவே இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

No comments