தீர்வின்றேல் ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு?


இலங்கையில் அடுத்துவரும் தேர்தல்களின் போது முக்கிய துருப்புசீட்டாக காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை முன்னிறுத்த அவர்களது குடும்பங்கள் தீர்மானித்துள்ளன.

வடக்கு - கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரி தொளாயிரம் நாட்களை அண்மித்து மாவட்டங்கள் தோறும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அவர்களது போராட்டம் இலங்கை அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுவருகி;ன்ற நிலையில்  நிலையில் தமது போராட்டத்திற்கு நீதி வழங்குமாறு கோரி வீதிகளிற்கு அவர்கள் இறங்கிவருகின்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வவுனியா ,கிளிநொச்சி,முல்லைதீவு மற்றும் யாழ்ப்பாணமென வடக்கில்  வீதிகளில் இறங்கி குடும்பங்களது போராட்டங்கள் தொடர்கின்றது.

தமிழ் அரசியல்வாதிகளை பொறுத்த வரையில் அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினராக வந்துவிட வேண்டும் என்பதில் மாத்திரமே அக்கறை கொண்டிருப்பதாக குடும்பங்கள் குற்றஞ்சுமத்துகின்றன.போரின் பக்க விளைவுகளுக்குக் கூடத தீர்வை முன்வைக்குமாறு சர்வதேசத்தை நோக்கி அழுத்தம் கொடுக்கவில்லை.

1976 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் சிங்கள அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தார்கள், அன்றில் இருந்து இன்று வரை சிங்கள ஆட்சியாளர்களை நம்பி, தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஏமாந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு உறுதியான தீர்வை தரும் தரப்புக்களை தம்முன்வர வலியுறுத்தி போராட்டத்தை விரைவுபடுத்த தற்போது அவர்களது குடும்பங்கள் முடிவு செய்துள்ளன.

No comments