ராஜபக்சாக்களை தோற்கடிக்கும் சக்தி சஜித்திடமே - மங்கள அதிரடி

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயமாகப் போட்டியிடுவார். ராஜபக்சாக்களை தோற்கடிக்ககூடிய வேட்பாளர் அவரே என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்க கோரி மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெறும் மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு இல்லை. இன்னும் ஓரிரு நாட்களில் சர்ச்சைகளுக்கு முடிவு கட்டப்படும். அன்புக்குரிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிவார். அதனை சபாநாயகர் கருஜயசூரிய வழிமொழிவார்.

ராஜபக்சாக்களின் போலி பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம். கடந்த நான்கு ஆண்டுகளில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொருட்கள், சேவைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

சஜித்துக்காக திறைசேரி ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யும்போது அஞ்ச வேண்டியதில்லை. அவர் திருட மாட்டார். மக்களுக்கு உரிய வகையில் சேவைகள் சென்றடையும். என்றார்.

No comments