முன்னணி வரும்:காத்திருக்கிறார் விக்கினேஸ்வரன்!


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கொள்கை ரீதியாக எங்களோடு சேர்ந்தவர்கள். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போது அவர்கள் விடுபட்டு நிற்கின்றார்கள் எனத் தெரிவித்திருக்கும் முன்னாள் முதலமைச்சரும் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் எதிர்காலத்தில் முன்னணியினர் வந்து தங்களுடன் சேருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
தமிழ் மக்கள் பேரவையினால் யாழில் நடாத்தப்படவுள்ளஎழுகதமிழ் பேரணிக்கான பரப்புரை பேரவையின் இணைத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்கினெஸ்வரனால் நல்லூரில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்தப் பரப்புரைநிகழ்வில் கலந்துகொள்வது தொடர்பாக பேரவைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அச்சந்திப்புக்கள் வெற்றியளிக்காத காணரத்தினால் இந்த பரப்புரையில் முன்னணியினர் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பில் விக்கினேஸ்வரனிடம் வினவியபோது இவ்வாறான பிரச்சனை தற்போது தமிழ் மக்கள் பேரவைக்கு அதற்கு முன்னர் தமிழ் மக்கள் கூட்டணிக்கு இருந்து வந்தது அதனை நாங்கள் பெரிதாக எடுப்பதில்லை. ஏனென்றால் கொள்கைரீதியாக அவர்கள் எங்களோடு சேர்ந்தவர்கள். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் விடுபட்டு நிற்கின்றார்கள். 

ஒரு காலத்திலே அவர்களும் வந்த எங்களோடு சேருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஆகையினால் அதைப்பற்றி இப்பொழுது பெரிதாக அலட்டிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்றுதான் கருதுகின்றேன் என்றார்.

No comments