துப்பாக்கியுடன் அச்சுறுத்தல் - குருநாகல் மேயருக்கு விளக்கமறியல்

குருநாகல் மாநகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜயசுந்தர முன்னிலையில் அவர் இன்று ஆஜராகிய போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி முனையில் ஒருவரை அச்சுறுத்தி பணம் கொள்ளையிட்டமை மற்றும் ஒருவரை கடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் குருநாகல் மாநகர மேயருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் வௌிநாட்டிற்கு சென்றிருந்தார். இதன் காரணமாக குருநாகல் மாநகர மேயருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சட்டத்தரணியூடாக அவர் இன்று குருநாகல் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments