இந்தியாவினை நிராகரித்த ஐநா! டிரம்பும் எச்சரிக்கை;

இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார் .ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றக் கூட்டம் நிறைவடைந்துள்ள சூழலில் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இரு தரப்பும் எந்த வகையிலும் ஒரு தலைப்பட்சமாக முடிவெடுக்கக்கூடாது என்று பாதுகாப்பு மன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.
காஷ்மீர் தனக்கே உரியது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பாதுகாப்பு மன்றம் நிராகரித்திருப்பதை அதன் அவசரக் கூட்டம் உணர்த்துவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான பாகிஸ்தான் பிரதிநிதி மலீஹா லோதி கூறினார்.
காஷ்மீரில் நடத்தப்படும் மனித உரிமை மீறல் குறித்தும் பாதுகாப்பு மன்றத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார். 

No comments