கமலஹாசனை நடிகராகத் பாகிரார்கள், நிலையான கருத்தும் இல்லை!

கமலஹாசனை நடிகராகத் பாகிரார்கள், நிலையான கருத்தும் இல்லை என அதிமுக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ”நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வர் ஆகலாம். அவர் முதல்வர் ஆக வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவர் புரட்சித் தலைவர் மட்டும்தான். 1967ல் புரட்சித் தலைவர் குண்டடிபட்ட வால்போஸ்டர் தான் அப்போது திமுக வெற்றி பெற்றதற்குக் காரணம். கமலை நடிகராகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். நிலையான கருத்தும் இல்லை முழு நேர அரசியலில் இருப்பேன் என்று தெரிவித்தார் தற்போது மீண்டும் சினிமாவுக்கு சென்றுவிட்டார். கமல் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்பதைக் கடந்த தேர்தல் முடிவுகள் காட்டியது” என்று தெரிவித்தார்.

No comments