ஹொங்கொங்கில் பாரிய அரசியல் பிளவு போராட்டம்!

அரசாங்கத்துக்கு எதிராக ஆர்பாடம் தொடர்ச்சியாக நடந்துவரும் நிலையில் அங்கு வானூர்தி நிலையம் பூட்டப்பட்டுள்ளது. அது ஒருபுறம் இருக்க அரசாங்கத்துக்கு ஆதரவு  ஹாங்காங்கின் புகழ்பெற்ற துறைமுகத்தின் அருகில் சனிக்கிழமையன்று தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கக் கோரி லட்சக்கணக்கில் கூடினர். அங்கே கூடியவர்கள் முதலில் வைத்த கோரிக்கை அடிக்கடி நடக்கும் வன்முறை போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

"அரசாங்கம் இப்போது மக்களுக்கு செவி சாய்க்கவில்லை, காவல்துறையினர் மிகவும் வன்முறையில் உள்ளனர், அவர்கள் ஹாங்காங் மற்றும் சீனா இரண்டையும் நேசிக்கவும், சீனாவிற்கு ஏன் பயப்படுகிறார்கள் என்று எதிர்ப்பாளர்களை கேட்டனர்.இந்த போராட்டத்தின் மூலம் ஹாங்காங்கில் அரசாங்கத்துக்கு எதிராகவும் ,ஆதராவாகவும் மக்கள் பிளவுபட்டு இருக்கிறார்கள் என்றும் இது பாரிய விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

No comments