பெங்களூரில் தீவிரவாதிகள் ஊடுருவல், வீதிகள் மாநில எல்லைகளில் கடும் சோதனை!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து பெங்களூருவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,
பெங்களூருவில் உள்ள பேருந்து , துடரூந்து , வானூர்தி நிலையம் மற்றும்  காவல்துறையினர்  குவிக்கப்பட்துள்ளனர்.

மேலும் மெஜஸ்டிக்கில் உள்ள சிட்டி ரெயில் நிலையம், பி.எம்.டி.சி மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுமட்டுமல்லாது கர்நாடகம்-தமிழக எல்லை, கர்நாடகம்-மராட்டிய எல்லை, கர்நாடகம்-ஆந்திரா எல்லை, கர்நாடகம்-கேரள எல்லைகளிலும் காவல்துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். காவல்துரையினர்களுக்கு உதவியாக மதிய அரசு படைகளும்அதிரடிப்படைகளும் ஈடுபட்டுவருகின்றனர்.

No comments