சீவீகே போராட்டம் சந்தர்ப்பவாத போராட்டம்:மறவன்புலோ?


கூட்டமைப்பினர் போராட்டமென்ற பேரில் தமிழ் மக்களை ஏமாற்றுவதாக தமிழரசு கட்சி முக்கியஸ்தரும் ஈழம் சிவசேனை தலைவருமான மறவன்புலோ சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் யாழ்ப்பாணம் நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீன முன்றலில், எதிர்வரும் சனிக்கிழமை 3.8.2019, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் அறிவித்து இருக்கிறார்கள்.

வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் மாண்புமிகு சிவஞானம் அவர்கள் தலைமை தாங்குவதாக அறிவித்திருக்கிறார்.

சிவசேனையில் உள்ளோர் வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம் போற்றுகிறோம்.

தெற்கே உகந்தை தொடக்கம் வடக்கே மாதகல் வரை, தென்மேற்கே வாய்க்கால் ஆறு வரை, சைவத்தமிழ் நிலங்களில் பறி போகின்றன. சைவத்தமிழ் கோயில்கள் இடிபடுகின்றன சைவத் தமிழர் மதம் மாற்றுகின்றனர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் சிதைகின்றன.

சைவர்கள் பெரும்பான்மையாக உள்ள கல்வி நிலையங்களில் சைவ விழாக்கள் கொண்டாடத் தடை. கல்வி நிலையங்களில் திருநீறு, நெற்றிப்பொட்டு, கூந்தலில் பூ, தாவணி, வேட்டி, அணியத் தடைகளும் உள்ளன.

சைவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடத்தில் விவேகானந்தர் சிலையை உடைத்து விட்டு அந்தோணியார் சிலையை நிறுவுதல். நான்கரை ஆண்டுகளாக அம்மன் கோயிலுக்குச் செல்லும் ஒரே ஒரு பாதையை வழிமறித்துப் பாதிரியார் அடைப்பு.

சைவர்களுக்கு என அரசு ஒதுக்கிய நிலத்தில் மதில் கட்டி ஆக்கிரமிக்கும் பாதிரியார் தடுக்கும் மக்களைத் தடிகொண்டு அடிக்கிறார். கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் நிகழ்த்துவோரையும் பாதிரிமார் விரட்டுவர். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மரியாள் சிலைகளையும் சிலுவைகளையும் முற்று முழுதான சைவச் சூழலில் சாலை ஓரங்களில் எவ்வித அனுமதியும் இன்றி நிறுவுவர். சைவக் குடும்பங்கள் வாழும் சிற்றூர்களுக்குரிய சாலைத் தலைவாயிலில் கிருத்தவ வளைவுகளைக் கட்டுவர்.

புத்த ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தென்னமரவாடி, கொக்கிளாய், செம்மலை, கன்னியா, நாவற்குளி, குச்சவெளி, திருகோணமலை, சிவொளிபாதமலை  எனச் சைவர் போராடும் ஊர்களின் பட்டியல் நீளும். உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சிவன் கோயிலை ஆட்சிக்குள் கொண்டு வரும் புத்த பிக்கு. பண்டைய அம்மன் கோயிலில் இன்றைய புராதன இராசமா விகாரைகள். சிங்கள மன்னரே பல்லாயிரம் ஆண்டுகள் மானியம் கொடுத்த சிவன் கோயில் இன்று புத்த பூசாரிகளின் பிடியில்.

காத்தான்குடியார் கடைகளை முதலில் போடுவர். பிள்ளையார் கோயில் சாலையைப் பள்ளி மசூதிச் சாலையாக மாற்றுவர். சைவப் பள்ளிகளுக்கு செல்லும் சைவத்தமிழ் மாணவ மாணவிகளைக் காதல் வலையில் வீழ்த்துவர். காத்தான்குடிக்கு அழைத்துச் செல்வர். காளி கோயிலை உடைத்து மசூதி கட்டுவர். அவ்வாறு செய்தோம், அரச அதிகாரத்துடன் செய்தோம் எனத் தினவெடுத்து மார் தட்டுவர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதுநாள் வரை இவற்றைக் கண்டு கொள்ளவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையோ மதமாற்றிகளின் பிடிக்குள்.

மெதடிஸ்த திருச்சபையின் துணைத் தலைவராகத் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். மன்னார் எங்கும் மதமாற்றத்திற்கு அவரே தலைமை தாங்குகிறார். அவரது மனைவி மதமாற்ற முயற்சிகளுக்காக மாதம்தோறும் ஒன்றே முக்கால் இலட்சம் ரூபாய் வெளிநாட்டிலிருந்து சம்பளமாகப் பெறுகிறார். மதமாற்ற முயற்சிகளுக்காக அவருக்கு ஆண்டுதோறும் வெளிநாட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் செலவுத் ொகை கொடுப்பர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவேகானந்தர் சிலை அமைக்கவோ சைவ வளைவுகள் கட்டவோ எதிர்ப்பர். சைவர்களின் தன்னம்பிக்கையை உடைப்போரை ஊக்குவிப்பர். பிள்ளையார் கோயில்களை உடைப்போரைக் காப்பர்.

இவற்றையெல்லாம் இந்நாள்வரை கவனத்தில் கொள்ளார். சைவ உலகின் கண்ணீரை துடைக்கார். அழுகுரலுக்குச் செவி சாய்க்கார். கதறலை கேட்டால் காதுகளைப் பொத்துவர். சங்கியன் 400ஆவது நினைவுநாளுக்கு வருக என அழைத்தால், கிறித்தவரைப் பகைக்க விரும்பவில்லை எனச் சொல்வர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்துக்களைக் காப்பாற்ற வேண்டும் சைவர்களைக் காப்பாற்ற வேண்டும், சைவர்களை காப்பாற்றுவதற்கு இந்தியாவிடம் உதவி கேட்க வேண்டும், என்றெல்லாம் உரத்த குரலில் பேசி வருகிறார்கள்.

சைவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கும் குறைகளைப் போக்குவதற்கும் மதமாற்றங்களை தடுப்பதற்கும் கோயில்களை காப்பதற்கும் யார் உதவிக்கரம் நீட்டினும் சிவசேனையுள்ள நாம் வரவேற்போம். நீலிக் கண்ணீர் வடிப்பவரோ, முதலைக் கண்ணீர் வடிப்பவரோ குரல் கொடுத்தாலும் சிவசேனை வரவேற்கும்.

அந்த வகையில் தமிழர் தேசியக் கூட்டமைப்பினரின் 3.8.2019 சனிக்கிழமை அன்றான நல்லூர்ப் போராட்டத்தைச் சிவசேனை வரவேற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments