ஹாங்காங் எல்லையில் பதற்றம்! குவியும் சீன இராணுவம்!

சீனாவின் துணை ராணுவப் படைகள் ஹாங்காங் எல்லைக்கு அருகில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று சர்வதேச உடகங்கள் அனைத்தும் கூறிவருகின்றது.ஹாங்காங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சீனா நடவடிக்கை மேற்கொள்ளவே இவ்வாறு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என அச்சம் வெளிப்படுத்தப்படுள்ளது.
ஹாங்காங் எல்லைக்கு அருகில் உள்ள, சீனாவின் ஷன்சன் (Shenzhen) விளையாட்டு அரங்கத்தில் சீன ராணுவப் படைகள் திரண்டன.
100க்கும் அதிகமான, துணை ராணுவப் படை வாகனங்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருகின்றன.
ஹாங்காங்கில் நடைபெற்றுவரும்  அண்மை ஆர்ப்பாட்டங்கள், பயங்கரவாதச் செயல்பாடுகள் போல காட்சியளிப்பதாக சீனா வன்மையாகக் கண்டித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments