இந்தி திரையுலகை ஆட்டங்காண வைத்த தமிழ் றோக்கர்ஸ்!

தமிழ் திரை உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து இணையத்தை கலக்கும் தமிழ் றோக்கர்ஸ் இப்போது இந்தி உலகையும் , பிரபல தயாரிப்பு நிறுவனத்தையும் ஆட்டம்காண வைத்துள்ளது.

 பிரபல பாலிவுட் இயக்குநர்களான அனுராக் காஷ்யப், விக்ரமாதித்யா மோத்வானே இருவரும் இணைந்து இயக்கி, நவாசுதீன் சித்திக், சைஃப்  அலிகான் போன்ற முக்கியமான நட்சத்திரங்கள் நடித்துள்ள சேக்ரட் கேம்ஸ் 2 (Sacred Games season 2)  , நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனத்தின் தயாரிப்பில் 100 கோடி செலவில் உருவாக்கப் பட்ட இந்த இணைய தொடர் இந்திய சுதந்திர நாளில் வெளியுட்டுள்ள நிலையில், வெளியாகி அடுத்த நாளன நேற்றே
தமிழ் றோக்கர்ஸ் இணையத்தளம் அனைத்து பகுதிகளையும் சிறந்த ஒலி , ஒழி திறனுடன் வெளியிட்டு இந்தி திரை உலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஏற்க்கனவே ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரண்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் பெயர்களில் செயல்பட்டு வரும் டொமைன்களை உடனடியாக முடக்க வேண்டும் என்று நீதிபதி சஞ்சீவ் நருலா உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் என்ற உலகின் முன்னணி பிளாட்ஃபார்மின் வெப் சீரிஸையே வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது தமிழ் றோக்கர்ஸ்.
இதனால் பெரும் தொகையினை செலவழித்து எடுக்கப்பட்ட இந்த இணைய தொடர் நெட்ஃபிளிக்ஸில் பார்வையாளர்களின் எண்ணிகை குறைய வாய்ப்பிருப்பிருப்பதால் கடும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று திரையுலகினர் கூறுகின்றனர்.

No comments