வனஜீவராசிகள் காணி பிடிக்கின்றது:கண்டுபிடித்த சுமந்திரன்?


வடமராட்சி கிழக்கின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இலங்கை வனஜீவராசிகள் திணைக்களம் வெளியிட்ட அரசிதழ் எனப்படும் வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யப்பணிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக கூட்டத்தில் வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுத்தீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடமாகாண சபையின் பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போதே வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் வடமராட்சி கிழக்கின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இலங்கை வனஜீவராசிகள் திணைக்களம் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு தவறானதென வாதிட்டிருந்தார்.

அவரது கருத்தை எம்.ஏ.சுமந்திரனும் ஏற்றுக்கொண்டு வாதிட்டதுடன் குறித்த வர்த்தமானி அறிவிப்பை இரத்துச்செய்ய இலங்கை வனஜீவராசிகள் திணைக்களம் சாக்குப்போக்குகளை சொல்வதாக தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த வர்த்தமானி அறிவிப்பினை இரத்து செய்ய பிரதமர் ரணில் அறிவுறுத்தலை விடுததுள்ளார்.

No comments