இந்தி மொழியில் அறிவிப்பு, மன்னிப்பு கோரியது சிங்கபூர் தேசிய மருத்துவமனை

சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை அதன் சுவரொட்டியில் தமிழ் மொழிக்கு பதிலாக இந்தி மொழியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

சுவரொட்டியில் "பயன்படுத்தப்பட்ட போர்வைகளைக் கூடையில் போடவும் " என்று எழுதப்பட்டிருந்து. அதில் மாண்டரின், மலாய், ஆங்கிலம், இந்தி மொழிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றான தமிழ் இடம்பெறவில்லை. அதைக் கண்டித்து சமூக ஊடகங்களில் இணையவாசிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

தற்போது அந்தச் சுவரொட்டி அகற்றப்பட்டுவிட்டதாகவும்
மருத்துவமனை கூறியது.சம்பவம் தொடர்பாகக் கருத்து கூறியவர்களைத் தொடர்புகொண்டதாகவும், அவர்களின் புரிந்துணர்வுக்கு நன்றி தெரிவித்ததாகவும் மருத்துவமனை குறிப்பிட்டது.

No comments