அணுசக்திக்கு பணம் திரட்ட,17 நாடுகள் மீது வடகொரிய சைபர் தாக்குதல்!

வட கொரியர்கள் 17 நாடுகளில் சைபர் தாக்குதல்களை பயன்படுத்தி அணுசக்தி திட்டத்திற்கு பணம் திரட்ட மேற்கொள்ளப்பட்ட 35 சம்பவங்கள் தொடர்பில்  விசாரணை செய்துவருவதாக ஐ. நா. நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரம் அசோசியேடட் பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நிதி நிறுவனங்கள் மற்றும் பண  பரிமாற்றங்களுக்கு எதிரான அதன் அதிகரித்த அதிநவீன சைபர் செயல்பாடுகளில் வடகொரியாவிற்கு எதிராக" 2,000,000,000 டாலர்கள் " மோசடி குற்றச்சாட்டு உள்ளது என்று, வல்லுனர்களின் சுருக்கத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.

கோஸ்தா ரிக்கா, காம்பியா, குவாத்தமாலா, குவைத், லைபீரியா, மலேசியா, மால்டா, நைஜீரியா, போலந்து, ஸ்லோவேனியா, தென் ஆப்பிரிக்கா, துனிசியா மற்றும் வியட்நாம் ஆகிய 13 நாடுகள் ஒரு தாக்குதலை சந்தித்தது என்று அது கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments