வெளிவாரி பட்டதாரிகள் அம்பாறையில் போராட்டம்!

அம்பாறை மாவட்ட வேலையில்லா வெளிவாரிப் பட்டதாரிகள் சங்கத்தினர் காரைதீவு விபுலானந்தம் சதுக்கம் அருகில் இன்று (04) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகள் சிறிது தூரம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊர்வலமாக சென்றனர்.

இதன்போது வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணிக்காதே, அரச நியமனத்தில் பட்டதாரிகளுக்கு உள்வாரி வெளிவாரி என பாகுபாடு காட்டாதே என்ற பதாகைகளை அடங்கிய சொற்களை ஏந்தியவாறும் வெளிவாரி பட்டதாரிகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள்.

No comments