கடும் எதிர்ப்பிலும் புத்தளத்திற்கு புறப்பட்ட 17 குப்பை லொறிகள்

கொழும்பு நகரின் பல பகுதிகளில் தேங்கிக்கிடந்த குப்பைகளை அறுவக்காடு பகுதியில் கொட்டுவதற்கான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அறுவக்காடு குப்பை சேகரிக்கும் நிலையத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது. 

அந்த அனுமதிக்கமைய கொழும்பு மாநகர சபையினால் குறித்த பகுதியில் குப்பைகளை கொட்டும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. 

கடந்த திங்கட்கிழமை முதல் கெரவலப்பிடிய பகுதியில் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதனை மாநகர சபை மற்றும் மேல் மாகாண சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இடைநிறுத்தின. 

இதனால் கடந்த பல நாட்களாக கொழும்பு நகரில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடந்ததுடன் அதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்க்கொண்டனர். 

இந்த பின்புலத்திலேயே கொழும்பு குப்பைகளை அறுவக்காடு பகுதியில் கொட்டுவதற்கு கொழும்பு மாநகர சபை நேற்று முதல் நடவடிக்கை எடுத்தது. 

இதற்கமைய நேற்று இரவு 11.30 ஆகும் போது கொழும்பு குப்பைகளை ஏற்றிய 17 லொறிகள் அறுவக்காட்டை சென்றடைந்திருந்தன. 

No comments