டயகம தீ விபத்தில் நாசமான 12 வீடுகள் - குடும்பங்கள் நிர்க்கதி


நுவரெலியா - டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் நேற்றிரவு (05) இடம்பெற்ற தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளன.

இதில் சில வீடுகள் முற்றாகவும், சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. வீடுகளில் குடியிருந்த 09 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்காலிகமாக சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments