நாமலின் முகத் திரையை கிழியுங்கள் - பெரமுனவுடன் ஈரோஸ் இணையவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஈரோஸ் கட்சி ஆதரவு வழங்கியதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று (06) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷவுடன் ஈரோஸ் இணைந்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. வன்னியில் உள்ள ஈரோஸை சேர்ந்த துஷ்யந்தன் என்பவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்ததாக செய்திகள் வெளிவந்தன.
ஈரோஸ் எந்த பேரினவாத கட்சிகளுடனும் இணையவில்லை, இணையப் போவதும் இல்லை.
நாங்கள் யாரையும் ஆதரிப்பது என்றாலும் சில நிபந்தனைகள் உடனேயே ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும். இணைந்த வடகிழக்கு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடகிழக்கில் குடும்பங்கள் தலைமை தாங்கும் பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள், மலையக தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா ஆகிய ஒப்பந்தகளுக்குள் எந்த ஜனாதிபதி வேட்பாளர் வருகின்றாறோ அவர்களுக்கு வடகிழக்கு மலையக தமிழர்கள் வாக்களிப்பார்கள்.
எழுந்தமானமாக கடந்த காலத்தில் வாக்களித்து ஏமாந்த நிலை இனியும் ஏற்படக்கூடாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ சின்னப்பையன். அவர் தமிழ் மக்களுக்குள் வந்து தமிழ் கட்சிகளின் முகத்திரையினை கிளிப்பேன் என்று கூறியிருக்கின்றார்.
முதலில் நாமல் ராஜபக்ஷவின் முகத்தில் உள்ள திரையினை கிளியுங்கள். வன்னி யுத்ததின் போது காணாமல்போன இலட்சக் கணக்கானவர்கள் எங்கே?, அப்பாவி தமிழ் இளைஞர்களை சிறையில் அடைத்த நீங்கள் அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்தீர்களா? நீங்கள் ஓடிய வெள்ளைவானுக்கும் அதில் கடத்திய மக்களுக்கும் கணக்கு இல்லை, அவர்கள் எங்கே என்றும் இல்லை.
நீங்கள் எங்களுக்கு முகத்திரையினை கிழிக்க வரவேண்டாம். நாங்கள் உங்களது முகத்திரையினை கிழிக்க முற்பட்டால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். உங்களுக்கு யால்ரா போடும் சம்பந்தன், சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் முகத்திரையினை கிளியுங்கள். என்றார்.

Post a Comment