திருமலை சிறையில் கைதி ஒருவர் மரணம் - காரணம்?

திருகோணமலை சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நேற்று (17) இரவு 8.15 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கொழும்பு 12, மேமன் லேன் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஜே.ஏ.டி.ஜெகத் சிந்தக்க என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த கைதி 6500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தொகையை செலுத்த முடியாமையால் மூன்று மாதம் சிறைதண்டனை அனுபவித்து வந்த நிலையிலே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.​ 

No comments