கடலில் சிக்கிய குண்டுகள்

அம்பாறை - பொத்துவில் களப்புக்கட்டு பகுதியில் நேற்று (25) மீனவரின் வலையில் 81 எம்எம் (மில்லி மீட்டர்) ரக மோட்டார் குண்டுகள் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் குறித்த மோட்டார் குண்டுகள் சிக்கியுள்ளன. கருப்பு நிற பொலித்தீன் பை ஒன்றில் சுற்றி கட்டப்பட்டிருத்த நிலையில் அவற்றில் இருந்து மூன்று குண்டுகள் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

No comments