பிக்போஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் திடீர் விலகல்!

விஜய் தொலைக்கடிசியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சினிமா பிரபலங்கள் பங்குபற்றிவரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து கமல்ஹாசன் தற்காலிகமாக விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கமல் விரைவில் கலந்து கொள்ள போகிறார். அதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சுமார் 10 நாட்களுக்கு ஓய்வு கொடுக்கப் போகிறாராம்.
கமல்ஹாசன் பங்கேற்கும் காட்சிகள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 6 ஆம் தேதி வரை படமாக்கப்பட உள்ளது. அதன் பிறகு, மீண்டும் பிக் பாஸ் குழுவுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. எனினும் இது நிரந்தர விலகலாக இருக்ககூடும் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்துவரும் நிலையில், இந்த நிகழ்ச்சி இளைஞர்களையும், சிறுவர்களையும், சமுதாய கலாச்சாரத்தையும் சீரழிப்பதாகவும் கூறி, அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி சென்னையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் மாநில தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments