வெள்ளவத்தையை பரபரப்பாக்கிய மோதல் - பலர் காயம்


கொழும்பு - வெள்ளவத்தை, மயூரா பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் மூன்று பொலிஸார் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (04) இரவு 11 மணியளவில் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் கட்டமாணப் பணியில் இருந்த குழுவினருக்கு இடையே ஆரம்பித்த குறித்த மோதல் நள்ளிரவு தாண்டியும் இடம்பெற்ற நிலையில் குறித்த மோதலில் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பொலிஸார் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை இதன்போது 7 முச்சக்கர வண்டிகளும், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியன சேதமடைந்துள்ளன.

No comments