சிறுமிக்கு குடுபஸ்தரால் ஏற்பட்ட நிலை! ஒருவர் கைது

நோர்வூட் பொலிஸ் பிரிவு பொககெர்க்கஸ் வோல்ட் கீழ் பிரிவு தோட்ட பகுதியில் வசித்த 15 வயது சிறுமி, குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கினிகத்தேன பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (23) இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த 15 வயது சிறுமி கர்ப்பம் தரித்த விடயம் வெளியானதை தொடர்ந்து, சிறுமி கடந்த 3 தினங்களுக்கு முன்பு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

தொடர்ந்து சிறுமியால் பிரசவிக்கபட்ட குழந்தை 5 மாத குழந்தை என்பதால் குழந்தை இறந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குழந்தை இறந்த விடயம் தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டதை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸாருக்கு, சிறுமி வழங்கிய வாக்குமூலத்தில் அடிப்படையில் குடுபம்பஸ்தரானா சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments