நகுலேஸ்வரம் குப்பையீஸ்வரமாகின்றது?

யாழ்மாவட்டத்தில் இருக்க கூடிய சகல பிரதேச சபைகளின்(17) இறுதிக்கழிவுகளை (உக்காத, மீளுருவாக்கத்திற்கு பயன்படுத்த முடியாத குப்பைகளை) கொட்டுவதற்கான/சேகரிப்பதற்கான ஒரு செயற்திட்டம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள காங்கேசன்துறை சீமெந்துகூட்டுத்தாபனத்தினால் கல் அகழபட்ட குவாரி கிடங்கினுள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் கொரிய நிறுவனத்தினால் இடம்பெற்றுவருகிறன!
இது தொடர்பில் ஊடகங்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கவனத்தை செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்ளவதோடு, திசை திருப்பும் வகையில் கருத்துக்களை முரணாக வழங்கவேண்டாம் எனவும் கோரி நிற்கிறோம்! என சமூக மேம்பாட்டுக்கும் நீதிக்குமான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 'தொம்பே' என்ற இடத்தில் அமைக்கபட்டிருக்கின்ற இந்த செயற்திட்டம் உண்மையில் கழிவுமுகாமைத்துவத்தை பொறுத்தவரையில் சிறந்த சுகாதாரமுறையானது! அந்த முறையில் சொல்லபட்டிருப்பது போன்ற முழுமையான 'கழிவுக்கூடம்' அமைக்கபடுமேயானால் அதன் பக்கவிளைவுகள் குறைந்தாகவே காணபடுகின்றது!
அப்படிப்பட்ட ஒரு குப்பைகூடம் யாழ்பாணத்திற்கு தேவையானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது!

ஆனால் அது அமைக்கபடபோகும் இட நிலையம் தொடர்பில் தான் இங்கே பிரச்சனை எழுந்திருக்கிறது! வலிகாமம் வடக்கு கீரிமலை பகுதிக்கு அண்மையில் நிலையமிடப்பட்ட சீமெந்து கூட்டுதாபனத்தின் குவாரி கிடங்கு அமைந்துள்ள பிரதேசமானது கலாச்சார ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், புவியியில் ரீதியிலும் யாழ்பாணத்தை பொறுத்தவரையிலும், ஏன் தமிழர் தாயகத்தை பொறுத்தவரையிலும் மிக மிக முக்கியமானதொரு பிரதேசமாகவே காணபடுகிறது! அதற்கு பின்வரும் காரணங்களை குறிப்பிடலாம்!
கலாசார ரீதியல்:
1)வராற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கும், பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இரு ஆலயங்களுக்கும் மிக அண்மையில் (1Km) குறித்தபகுதி அமைந்துள்ளது!
2)அத்துடன் குறித்த குவாரி கிடங்கு பகுதியுடன் சேர்த்து உயர்பாதுகாப்பு வலயத்தினினுள்ள பகுதியில் குழந்தைவேல் சித்தர் சமாதி கோவில், அருளம்பல சுவாமிகள் சமாதி,சடையம்மா சாமாதி, ஸ்ரீ ரேணுகா ஆச்சிரமம் என்பன அமைந்துள்ளன!
3) அத்துடன் சருமநோய் நீக்கவல்ல நன்நீர்ஊற்றும் அப்பகுதியில் இருப்பதாக கூறபடுகிறது ( குதிரை முகம் நீங்கிய, அரசிளங்குமாரி நீராடிய இடம் அதுவே)
4) நகுலமுனிவர் தவமியற்றிய குகையும் குறித்த பகுதிக்கண்மையிலேயே உள்ளடங்குகின்றது!
5) ஆடி அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து பிதிர்கடன் நிறைவேற்றும் புண்ணிய தீர்தமாக சொல்லபடுகின்ற கண்டகிதீர்த்த கடற்கரை மிக அண்மையிலேயே இருக்கின்றது!
6) மாவிட்டபுரம் கந்தசுவாமிகள், தீர்தோற்சவத்திற்காக வலம்வருகின்ற கீரிமலை வீதியுடனேயே குறித்த கழிவுகூடத்திற்கான பகுதியுமாக இருக்கின்றது!
7) யாழ்மாவட்டதிலுள்ள பிரதேச சபைகளின் கழிவுகள் கொண்டுசெல்லபடுமேயானால் மாவிட்டபுரம் ஆலயம் அல்லது கீரிமலை நகுலேஸ்வர ஆலய முன்றலினாலேயே கொண்டுசெல்லவேண்டி இருக்கும்!
8) இந்த புனித ஆலயங்களுக்கு செல்லும் அடியவர்கள் தூய்மையாக, புனிதமாக செல்லும்போது இத்தகய பாரிய கழிவுகூடத்தையும், அதன்துர்நாற்றத்தையும் கடந்துசெல்லுதல் என்பது உளவியல் ரீதியலும் சலிக்க செய்யும்!
இவ்வாறாக ஒரு சிவபூமியாக வரையறுக்கபட கூடிய வலயமாக கலாச்சார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்திருக்கிறது வலிவடக்கிலுள்ள இப்பிரதேசம்! இத்தகய சிவபூமியில் இந்த பாரிய கழிவுக்கூடம் அமைக்கபட்டால் நீண்டதூரத்திற்கு (தொம்பே போன்று) துர்நாற்றம் வீசும் வாய்ப்பு இருக்கிறது! இந்த செயற்திட்டம் சைவசமயத்தவர்களையும் அவர்கள் புனிதமாக கருதும் இடத்தையும் அவமதிப்பதாகவே பார்க்கவேண்டியுள்ளது!
பொருளாதார ரீதியில்:
இலங்கையின் இரண்டாவது பெரும் விமான நிலையமாக தரமுயர்த்தபடபோகும் பலாலி விமானநிலையமும், காங்கேசன்துறை துறைமுகமும் அமைந்துள்ள அதேவலிவடக்கு பகுதியிலேயே இந்த பாரிய குப்பைகூடமும் அமைக்கபடபோகிறது! பிற்காலத்தில் இந்த குப்பை கூடத்தை குறிப்பிட்டு குறித்த விமானநிலையமும், துறைமுகமும் முக்கியமற்றதாக்கபடலாம்! அல்லது தற்போது இலங்கைக்கு கொண்டுவரபட்டிருக்கும் வெளிநாட்டுகுப்பைகளை கொள்வனவு செய்து இறக்குமதி செய்ய பொருத்தமான இடமாக இந்த விமான நிலையமும், துறைமுகமும் காட்டபட்டு வெளிநாட்டுகுப்பைகள் சேகரிக்கபடும் இடமாக இந்த Sanitary Land filling பகுதி மாற்றபடலாம்!
இவ்வாறாக விமான நிலையம், துறைமுகமும் கொண்டு வடக்கின் பொருளாதார மையமாக விளங்க கூடிய வலிவடக்கு பகுதி இப்பாரிய கழிவு கூடத்தினால் நாசம் செய்யபடலாம்!
புவியியல் ரீதியில்: 
இந்து சமுத்திரத்திர கடற்கரையோரமாக இருக்கும் பகுதியில் இத்தகய குப்பைகூடம் அமைக்கபடுதல் என்பது பொருத்தமற்றதாகவே புவியில்துறை நிபுணர்களால் பார்க்கபடுகிறது!

ஏற்கனவே இலங்கையில் அனுமதி வழங்கபட்ட இதுபோன்ற 4 குப்பை கூடங்களில் (புத்தளம் தவிர) எதுவும் கடற்கரைக்கு அண்மையில் அமைக்க அனுமதிக்க படவில்லை!
காரணம் இக் கழிவு கூடம் அமைக்கபட்டு 20 தொடக்கம் 50ற்கு இடைபட்ட ஆண்டுகளில் அந்த குப்பைகூடம் மூடபட்டு நிரவுகை செய்யபட்டாலும், கடற்கரைபகுதிக்கு மிக அண்மையில் அமைந்திருப்பதால் பாரியளவிலான இயற்கை சீற்றங்கள்,சுனாமிகள்,புயல்களின் போது தாக்கபட்டு கழிவுகள் கடலுடன் கலக்க வாய்ப்பு இருக்கிறது!
அதுமட்டுமன்றி, குறித்த கழிவு கூடத்தின் கீழ்பகுதியில் போடபடுகின்ற 2 வது Layer மூலமாக கழிவுப்பொருட்களில் இருந்து மேலதிகமாக வடிகின்ற நீர் சேகரிக்கபடும்! குறித்த நீர் எவ்வாறு அப்புறபடுத்தபடபோகின்றது என்ற தெளிவான தொழிநுட்ப அறிக்கையும் வழங்கபடவில்லை! அந்த கழிவுபதார்தம் கடலுடன் சேர்க்கபடும் அபாயமும் காணபடுகிறது!
அந்தவகையில் புவியியில் ரீதியிலும் வலிவடக்கு பகுதி இந்த கழிவு கூடத்திற்கு பொருத்தமானதாக அமையபோவதில்லை!
இவ்வாறாக கழிவுகூடத்திற்கான நிலையமாக கலாசார,பொருளாதார மற்றும் புவியியல் ரீதியிலும் பொருத்தமற்று காணபடும் அதே சந்தர்பத்தில் குறித்தபகுதிக்கு அண்மையில் ஏராளமான மக்கள் குடியிருப்புக்களும் அமைந்துள்ளன!
இந்த நிலையத்திற்கு மிக அண்மையில் உள்ள மாவிட்டபுரம், கொல்லன்கலட்டி,கீரிமலை ஆகிய கிராமங்கள் மிகவும் சன அடர்த்திகூடியபகுதிகளாக காணபடுகிறது! இந்த கழிவுகூட நிலையத்தோடு சேர்த்தே நல்லிணக்கபுரம் எனபடுகின்ற வீட்டுதிட்ட குடியிருப்பும் இருக்கின்றது!
ஏற்கனவே வலிவடக்கு பிரதேச சபையின் குப்பைகள் மட்டும் கொட்டபடும் போதே இந்த பகுதிமக்கள் எதிர்த்து ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், இன்று யாழ்மாவட்டத்தின் சகல பிரதேச சபை குப்பைகளும் கொட்டபோகும் பகுதியாக அறிவிக்கபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது!
இத்தகய ஒரு பாரிய செயற்திட்டம் முன்னெடுக்கபடும் போது, அப்பிரதேச வாழ்மக்களுக்கு இது தொடர்பான சாதக பாதக தன்மை தெரிவிக்கபட்டு கருத்தாய்வு செய்யபடவேண்டியது முக்கியமானதாகும்! ஆனால் இந்த செயற்திட்டத்திற்கான அனுமதிகள் அனைத்தும் வழங்கபட்ட நிலையில் இது தொடர்பாக அப்பிரதேசவாழ் மக்களுக்கோ, அல்லது அயலிலே இருக்கின்ற இரு பெரும் ஆலய நிர்வாகத்தினருக்கோ எந்த ஒரு தகவலும் தெரியாத நிலமையே காணபடுகிறது! பிரதேச சபை உறுப்பினர்களுக்கு கூட இதுகுறித்த பூரண தகவல் தெரியவில்லை என்பதும் இங்கே குறிப்பிடதக்கது!
Sanitary Land filling என சொல்லபடுகின்ற இந்த செயற்திட்டத்தை, தொழிநுட்பரீதியில் சொல்லபட்டிருப்பதை போல100% செய்தால் கூட இந்த வலிவடக்கு பகுதி பொருத்தமின்றி காணபடும் நிலையில், சொல்லபட்டிருப்பது போல 100% தொழிநுட்பம் பயன்படுத்தபடுமா என்பது கூட கேள்விக்குறியாகவே இருக்கிறது!
யாழ்பாணத்திற்கென ஒரு கழிவுகூடம் தேவை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதோடு அதற்கு பொருத்தமான இடம் வலிவடக்கு இல்லை என்பதை ஆணித்தரமாக கூறியாகவேண்டும்!
(இதற்கு பொருத்தமான மாற்று நிலையத்தினை துறைசார்நிபுணர்கள் பொருளாதார,புவியியல் நிலமைகளை கருத்தில் கொண்டு ஆய்வுசெய்வதுனூடு குறிப்பிடவேண்டும்)

2 வருடங்களுக்கு முதலே வலிவடக்கில் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் அனுமதிகளிம் வழங்கபட்டுவரும் நிலையில், கழிவுகூடத்துக்கான கொரிய நிறுவனத்தின் வேலைத்திட்டம் வெகுவிரைவில் வலிவடக்கில் ஆரம்பிக்கபடவுள்ளது! எனவே விரைந்து எதிர்வினையாற்ற வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்!
இதுவலிவடக்கின் பிரச்சனை மட்டுமல்ல யாழ்பாணத்தின், வடமாகணத்தின், தமிழர் தாயகத்தின் பிரச்சனையாக நோக்கவேண்டும்!
இது குறித்து அண்மையில் யாழ் ஊடக அமையத்தில் ஊடகசந்திப்பு ஒன்றையும், ஆடிஅமாவாசை தினத்தில் வலிவடக்கு கழிவுகூடத்திற்கு எதிரான கையெழுத்துவேட்டையும் நடாத்தியிருக்கிறோம்! 
தொடர்ந்தும் பல பாரிய போராட்டங்களுக்கும், தெளீவூட்டல் சந்திப்புக்களையும் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது!

விரைவில் தகவலறியும் உரிமைச்சடத்தினூடாக ஆவணங்களை பெற்று வழக்கு தொடரவும் முயற்சிக்கிறோம் என அழைப்பு விடுத்துள்ளது!

No comments