தென்னிலங்கை கட்சிகள் தமிழர் தாயகத்தில் கால்வைக்கும்?


வருந்தேர்தலில் தமிழ் மக்கட் பிரதிநிதிகளிடையே கொள்கை சார் ஒற்றுமைக்குப் பதில் பிரிந்த மனப்பாங்கே மேலோங்கி நிற்கும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. உண்மையில் நான் வலிந்து ஒரு சாராரை கொள்கை ரீதியாகஎம்முடன் சேருமாறு கூறிபணிந்து சென்றமை இவ்வாறான ஒரு நிலைமை வருந் தேர்தலில் ஏற்படக்கூடும் என்பதாலேயே. ஆனால், சுயநலம் வென்றுவிட்டது. பொதுநலம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒரே கொள்கையுடையோர் சேராது போனது, இதுவi ரகாலமும் கொள்கையை முன்வைத்து வாக்குப் பெற்று பாராளுமன்றத்திற்கு சென்று கொள்கை மறந்தவர்களுக்கு.ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று அந்தக் கொள்கை மறந்தவர்கள் நினைக்கலாம். ஆனால், எமது மக்கள் வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடும். பாராளுமன்றத்திற்கு உள்ளே இதுவரை காலமும் விடப்படா தகட்சிகளுக்கும் (அவ்வாறுஅழைக்கப்படும்)தேசியக் கட்சிகளுக்கும் தமது வாக்குகளைப்பகிர்ந்து கொடுத்து மிகஅபாயகரமான ஒரு நிலையை ஏற்படுத்தம் விதத்தில் அவர்கள் சிந்திக்கக்கூடும். குறித்ததேசியக் கட்சிகளும் அவற்றின்பால் சார் கட்சிகளும் தலையெடுத்தால் எமது நிலை தற்போதையநிலைக்கும் பார்க்கமிகவும் பரிதாபகரமானநிலையை அடையும் எனவும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் தேசியக் கட்சிகளில்; இருந்தும் அவற்றைச் சார்ந்தகட்சிகளில் இருந்துந்தெரிபடப் போகின்றவர்கள் தமிழரே. அந்தவகையில் ஆறுதல் கொள்ள நினைத்தாலும் கிழக்கில் தமிழர் அல்லாதோரே பெரும்பான்மையாகத்தேர்ந்தெடுக்கப்படுவர். அதன் பின் வடக்கிலும் கிழக்கிலும் பணம் எடுத்து வேலைகொடுக்கும் படலங்களும் தென்னவர்களின் கூடிய முதலீடுகளும்,வைத்தியசாலைகள், பாடசாலைகள், அரசாங்கதிணைக்களங்கள் போன்றவற்றில் கூடியபெரும்பான்மையினர் உள்ளடக்கங்களும் நடைபெறுவன. அவற்றைத்தேசியக் கட்சிகளும் அவற்றின் சார்ப்புக் கட்சிகளும் தடுக்கமுடியாமல் போய்விடும். அவர்கள் வடக்கில் தமிழர்கள் என்றாலும் கிழக்கில் பல் இனத்தவர். அவர்கள் யாவரும்அவர்களின் கட்சியின் தலைமைத்துவத்திற்குக்கட்டுப்பட்டே ஆக வேண்டும். அடம் பிடித்தால் பெரும்பான்மையினத் தலைவர்கள் மூலையில் இருத்திவிடுவார்கள். 

ஜனாதிபதிசிறிசேனபதவிக்குவந்ததுதமிழ்ப்பேசும் மக்களின் வாக்கினால். இதுவரைஅவர் எமதுதமிழ் மக்களுக்கான எந்தக் கோரிக்கையையும் நிறை வேற்றியுள்ளாரா? மத்திய அரசாங்கம் எதிர்பார்க்கும் நடவடிக்கைகளையே அவர் நடைமுறைப்படுத்திவந்துள்ளார். அதேபோல் எமதுதேசியக் கட்சிகளின் தமிழ் உறுப்பினர்களும் அவைசார்ந்த கட்சிகளின் உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு முண்டு கொடுக்கவேயன்றி தமிழர் தம் நியாயமானகோரிக்கைகளைநடைமுறைப்படுத்த இலாயக்கற்றவர்களாகவே இருப்பர். ஆகவே,தமிழரின் வருங்காலம்சார் கொள்கையில்; ஒருமைத்துவம் கொண்டமக்கட் பிரதிநிதிகள் கணிசமானவர்கள் இனிவரப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதன் அவசியத்தைநான் ஏற்றுக்கொள்கின்றேன். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்றால் தற்போதையநிலையில் ஒருவிதமயக்க நிலைதான் காணப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளாh

No comments