இரட்டைமுகம்:கூட்டமைப்பின் அதே பழைய கதை?


தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் இரட்டை முக அரசியல் மீண்டுமொருமுறை அம்பலமாகியுள்ளது.நேற்றைய தினமான ஆகஸ்ட் 30, காணாமல் ஆக்கப்பட்டோரை நினைவு கூரும் சர்வதேச நாள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கதி என்ன? சிறீலங்கா அரசின் பொறுப்புக் கூறல் பொறிமுறையின் தோல்வியால் உயிர் பிரிந்த தாய், தந்தையர் எண்ணிக்கை 50 இனை தாண்டியுள்ளது.

இத்தகைய சூழலில் நேற்று ஓமந்தையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியில் சிறீதரன் மற்றும் சத்தியலிங்கம்,சிவாஜிலிங்கம்,சிவசக்தி ஆனந்தனென அரசியல்வாதிகளும் நிறைந்திருந்தனர்.

அதிலும் சிறீதரன் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை தானே பகிர்ந்து மகிழ்ந்துமிருந்தார்.

எனினும் ரணிலோ அல்லது அரச அமைச்சர்களோ வன்னிக்கு வராமையால் நேரமிருந்து இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப போராட்டங்களிற்கு வருகை தந்திருந்தனர்.

ஆனால் இன்னொருபுறம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த மைத்திரியின் பின்னாலேயே துரத்தி ஓடுவதில் மாவை.சேனாதிராசா,சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் பற்றி சமூக ஊடகங்கள் கிழித்து தள்ளுகின்றன.

ஆனாலும் சித்தார்த்தன் தொடர்பில் தங்களிற்கு கோபமில்லையென தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் அவரும் கோத்தபாயவுடன் இணைந்து காணாமல் ஆக்குவதில் ஈடுபட்டிருந்தமையினை மறந்துவிடவில்லைn

No comments