கோத்தா பக்கம்:வடக்கிலிருந்து பெரும்பாய்ச்சல்!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து உள்ளக ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் வடக்கிலிருந்து பெரும் அணியொன்றும் பாயலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.குறிப்பாக உள்ளுராட்சி சபைகள் சிலது தலைவர்கள் இதனுள் உள்ளடங்கியிருப்பதாக தெரியவருகின்றது.

இத்தரப்புக்களுடனான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பெட்டிகள் கைமாற்றப்படலாமெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சித்தார்த்தன் தனித்து சந்தித்துள்ள நிலையில் அவரது ஆதரவு தரப்புக்கள் இதற்கு தயாராகின்றன.

கிழக்கு மாகாண கூட்டமைப்பு தரப்புக்கள் கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) சந்தித்திருந்தன.

இதனிடையே பொதுஜக பெரமுனவினர் தமது ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.வேட்பாளர் கோத்தபாய என்பது நிச்சயமாகியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திற்கும் கோத்தபாய வருகை தரவுள்ள நிலையில் அப்போது கூட்டமைப்பின் வடக்கு தரப்புக்களது சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தலைமை மட்டுமா தங்களை வளப்படுத்திக்கொள்வது மற்றையவர்களிற்கு சந்தர்ப்பமில்லையாவென இளம் தரப்புக்கள் பலவும் மும்முரமாக களமிறங்கவுள்ளன.

No comments