பிரகீத் கொலை? தண்டனை கேட்கிறார் மனைவி?


மைத்திரி –ரணில் அரசின் ஆயுட்காலம் முடிவுக்கு வருகின்ற நிலையில் அப்போது ஆட்சி பீடமேற பயன்படுத்தப்பட்ட பல விடயங்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளன.அவ்வகையில் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் மனைவி தன் கணவரின் இந்த வழக்கு தனது தற்போதைய வாழ்க்கை. நீதிக்கான தனது கோரிக்கையினை முடக்கவேண்டாமென கோரியிருக்கின்றார்.

பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடா காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமகமா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 7 ம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

அப்போதே சட்டமா அதிபரிடம் திருமதி சந்தியா எக்னலிகோடா கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டமா அதிபர் அவர்களே பிரகீத் எக்னலிகொடா கடத்தப்பட்டார், கொலை செய்யப்பட்டார், காணாமல் போயுள்ளார், மேலும் உண்மைகளை மறைத்து வைத்திருக்கும் இந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முறையான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு தங்களை கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவின் வழிநடத்தலில் கடத்தப்பட்ட பிரகீத் எக்னலிகொடா மட்டக்களப்பிலுள்ள இரகசிய புதைகுழியொன்றினுள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய செய்தி
காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான விசாரணை இராணுவத்தின் ஒத்துழைப் பின்றி நிறைவடைந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணை அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை குற்றவியல் விசாரணைத் திணைக்களம் சட்டமா அதிபரிடம் கையளித்துள்ளது.
பிரகீத் எக்னலிகொட காணமாற்போனமை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இராணுவம் தனது ஒத்துழைப்பை வழங்கத் தவறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த அறிக்கையில் பிரகீத் எக்னலிகொட காணாமற்போன சம்பவத்துக்கு பொறுப்பானதாக குற்றம் சாட்டப்படும் புலனாய்வு அதிகாரி தொடர்பான எந்தவொரு தகவலும் இல்லை.
குற்றவியல் விசாரணைத் திணைக்களம் கடந்த டிசம்பர் மாதம் நடத்திய விசாரணையில் பிரகீத் எக்னலிகொட காணாமற் போவதற்கு முன்னர் இராணுவத்தின் தடுப்புக்காவலில் இருந்தார் என்பதை கண்டறிந்திருந்தது.
எனினும் இந்த சம்பவத்துடன் பிரதான சந்தேகநபராக இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரணைக்கு இராணுவம் பூரண ஒத்துழைப்பை வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எக்னலிகொட கடந்த ஜனவரி 24 ஆம் திகதி 2010 ஆண்டு காணாமற்போனார்.அதாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments