கூட்டமைப்புடன் சந்திப்பு; இடைநடுவே நழுவினார் ஜனாதிபதி

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடல் எந்தவித தீர்மானமும் இன்றி நிறைவு பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

மகாவலி அபிவிருத்தி அமைச்சு, தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் வடக்கு ஆளுநர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், சீ.யோகேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிவமோகன், ஈ.சரவணபவன், சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளாத அதிருப்தியில் ஜனாதிபதி இடைநடுவே வெளியேறினார் என்று சிவமோகன் எம்பி தெரிவித்துள்ளார்.

No comments