ரணில் முடிவு ஓகஸ்ட் 31இல்?
ஐதேக முன்னணி தலைமையிலான கூட்டணி அமைக்கப்படும் தினத்தையும், ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய ஐதேக கூடி முடிவெடுக்கும் தினத்தையும், ஆகஸ்ட் 31ம் திகதி அறியத்தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சி தலைவர்களுக்கு இது தொடர்பில் அவர் உறுதியளித்துள்ளதாகவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ் மக்களின் பல முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளது.

மைத்திரி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் காணி விடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றங்கள், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியிருந்தது. 

No comments