கோத்தா வெட்டியாக பேசுகிறார்:மெல்கம் ரஞ்ஜித்?


மகிந்த அரசை மீள கதிரையேற்ற பாடுபடுபவராக அடையாளப்படுத்தப்பட்ட மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை கோத்தபாவை வெட்டியாக பேசுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து நியாயமான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு இந்த அரசாங்கத்திடமே கோரினேன் எனவும் அரசாங்கம் இது குறித்து மௌனம் சாதிப்பது கவலைக்குரியது எனவும் காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்.
இத்தாலியில் இருந்து வருகை தந்த ஆயர்கள் குழாமுடன் இன்று (27) காலை கண்டி தலதா மாளிகைக்குச் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது எமது பொறுப்பு. இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் குறித்து முறையான விசாரணைகள் நடைபெறுவதில் திருப்தி இல்லை என்றும் காதினல் தெரிவித்தார்.
தற்போது அனைவரின் கவனமும் அதிகாரத்தை பெறுவதற்காக திரும்பியுள்ளது. அதிகாரத்தில் இல்லாதவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளாகவே கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ள கருத்தை நான் பார்க்கின்றேன் எனவும் காதினல் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 21  பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரிக்க சுயாதீனமான ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் எனவும் காதினல் தெரிவித்த கருத்துக்கு கோட்டாபய ராஜபக்ஸ நேற்று அறிக்கையொன்றின் மூலம் பதிலளித்திருந்தார். இது குறித்து இன்று வினவப்பட்டபோதே  காதினல் இவ்வாறு பதிலளித்தார்.

No comments