கூட்டணியே ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும்?


இம்மாத முடிவினுள் ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி அறிவிக்கப்படுமென அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.நேற்றிரவு நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அமைக்கப்பட்ட உபகுழு சனிக்கிழமை கூடும என தெரிவித்துள்ள அவர் உபகுழு கூட்டத்தில் ஜனநாயக தேசிய முன்னணி என்ற கூட்டணி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அப்போதே கூட்டணியை நாட்டுக்கு அறிவிக்கும் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் அதேதினத்தன்று, கூட்டணி ஆவணத்தில் பங்காளி கட்சி தலைவர்கள் கையெழுத்திடுவதும், கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிப்பும் ஒருசேர நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக மனோகணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments