சரத்பொன்சேகாவிற்கு மீண்டும் ஆசை?

தென்னிலங்கை அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தா-சஜித் என விவாதித்துக்கொண்டிருக்க ஐக்கிய தேசிய கட்சி தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு நான் தயராகவே இருப்பதாக முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டில் இருக்கும் பிரச்சினையை சரியாக புரிந்துக்கொண்ட காரணத்தினாலேயே அவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை வேட்பாளராக களமிறக்க நடவடிக்கையெடுத்துள்ளார்.

அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியும் சிந்திக்க வேண்டும். என்னை வேட்பாளராக ஏற்குமாறு கோரினால் அதற்கு நான் தயார். நான் நாட்டை கட்டியெழுப்புவேன். எனக்கு மாளிகை அவசியமில்லை. எனது பாரியார் முதல் பெண்மனியாக இருக்க போவதில்லை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2010ம் ஆண்டைய தேர்தலில் மகிந்தவிற்கு எதிராக களமிறக்கப்பட்ட சரத்பொன்சேகா தோல்வியினை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments