பளையில் வைத்தியர் சிவரூபன் கைது?


பளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு பளை வைத்தியசாலையில் வைத்து கைதாகியுள்ளார்.

எனினும் அவரது கைது திட்டமிட்ட சதியென தெரியவந்துள்ளது.

தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில் விடுதலைப்புலிகளது மீள் எழுச்சி தொடர்பில் உருவாக்கப்பட்டுவரும் அரசியல் பூதாகரப்படுத்தலின் தொடர்ச்சியாக   வைத்தியகலாநிதி சிவரூபன்  கைதாகியுள்ளதாக சொல்லப்படுகின்றது.

கைதாகியுள்ள வைத்தியகலாநிதி சிவரூபன் பத்திற்கும் குறைவான வயதுடைய மூன்று குழந்தைகளது தந்தையாவார்.

மட்டக்களப்பினை சேர்ந்த சிவரூபன் யாழில் திருமணம் முடிந்திருந்ததுடன் யாழில் வசித்தும் வருகின்றார்.

யுத்த அழிவை சந்தித்திருந்த பளை வைத்தியசாலையினை மீளக்கட்டியெழுப்பிய முக்கிய பங்கு சிவரூபனை சேரும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments