படகில் இருந்து பெருந் தொகை ஹெரோயின் மீட்பு

காலி துறைமுகத்தில் மீனவப் படகு ஒன்றில் இருந்து நேற்று (18) 85 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

தென் பிராந்திய கடலில் மிதந்து வந்த குறித்த மீனவப் படகு கடந்த 10ம் திகதி முதல் கடற்படையினரால் தடுத்து வைத்து சோதனையிடப்பட்டது.

இதன்போதே படகில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments